உலக சுகாதார அமைப்பு, Monkeypox நோய் பரவல் குறித்து அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை அளவை செயல்படுத்தியுள்ளதோடு, வைரஸை சர்வதேச அக்கறைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
WHO தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட Monkeypox தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், மேலும் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஜூன் பிற்பகுதியிலிருந்து ஜூலை தொடக்கத்தில் 77% அதிகரித்துள்ளது. ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தற்போது தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.