தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் பலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
படித்து முடித்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உரிய நியமனங்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வியியல் கல்லூரியின் குழு ஏற்பாட்டாளர் நத்தேவல விமலிசிறி தேரர் தெரிவித்தார்.
சுமார் 5000 மாணவர்கள் இவ்வாறு அநீதிக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.
இவர்கள் அனைவருக்கும் அரச பாடசாலைகளில் நியமனம் வழங்கும் திகதி அமைச்சு அதிகாரிகளால் எழுத்து மூலம் வழங்கப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாக விஞ்ஞான பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.