உயர் தரப் பரீட்சைக்கான அழகியல் பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நடனம் (தேசிய) நடனம் (பரதம்) மேலைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீகதம், கீழைத்தேய சங்கீதம் ஆகியபாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சைகளுக்கு அனுமதி அட்டையில் குறி்பிடப்பட்டுள்ள பரீட்சை மண்டபங்களில் மாத்திரமே குறித்த பரீட்சார்த்திகள் தோற்ற முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை ஏனைய பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் சிங்கள தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர் முறைத் தொழிநுட்பம், பொறியியல் ெதாழிநுட்பம், மனைப் பொருளியல், நடாகமும் அரங்கவியலும் ஆகிய பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் புத்தாண்டுக்குப் பின்னர் நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.