க.பொ.த சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் போது காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரி மற்றும் காலி அனுலாதேவி கல்லூரி ஆசிரியர்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடைதாள் திருத்தும் பணிக்கு வருவதற்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பரீட்சைக் கடமைகள் மற்றும் விடைப்பத்திர மதிப்பீட்டுக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதிலும் அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கும் போது, ஆவணங்களைக் காட்டவும், எரிபொருள் நிரப்பவும் வரிசைக்கு வெளியே செல்வது சாத்மியமற்றது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று அடையாளப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கான தெளிவான தீர்வை அரசாங்கம் இன்று தரவில்லை என்றால் நாளை முதல் பரீட்சைக் கடமைகள் மற்றும் விடைப்பத்திர மதிப்பீடு இடைநிறுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.