தேசியக் கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படுகின்ற கல்வி மானிப் பாடநெறிக் கட்டணத்தை குறைக்குமாறு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசியக் கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படுகின்ற கல்வி மானிப் பாடநெறியின் (Bachelor of Education (special) Degree (science) (Bs22/2022) மூன்று வருடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பாடநெறியில் இதுவரை நடைபெற்ற முழுமையான பாடநெறிக் கட்டணமாக 84000 ரூபாயிலிருந்து 152000 வரை அறவிடப்பட்டது. அதை மேலும் 68000 ரூபாய் வரையான வித்தியாசத்தில் உயர்த்துவது தொடர்பாக இலங்கை ஆசிரிய சேவை சங்கம் கடுமையான எதிர்ப்பினை கல்வி அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
02) விசேடமாக தேசியக் கல்வி நிறுவகத்துக்கு ஊடாக கல்வியற் கல்லூரிகளை அறிமுகப்படுத்தியதின் பின்னர் அந்த உறுப்புரையில் குறிப்பிடப் படுவதன்படி வதிவிடத்தில் மூன்றுவருடங்கள் கல்வியற் கல்லாரிகளில் ஆசிரியப் பயிலுனர்களுக்கு வழங்கப்படுகின்ற டிப்ளோமா பாடநெறியை அதே காலப்பகுதாயினுள் கல்வி மானி விசேட பட்டதாரி பாடநெறி வரை அபிவிருத்தி செய்யும்படி அவ்வப்போது ஆட்சிபீடம் ஏற்றப்பட்ட அரசாங்கங்களால் பொய்யான உறுதி மொழிகளை வழங்கின ஆனால் தேசியக் கல்வி நிறுவகத்தை நேரடியாக வருமானத்தைப் பெறும் ஒரு வழியாகக் கொண்டுள்ளன.அரசாங்கமானது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக இதற்காக வழங்க வேண்டிய ஒதுக்கீடுகளுக்களை வழங்காமல் இலவசக் கல்விச் சட்ட மூலத்துக்கும், ஆசிரியர்களின் மனப்பாங்கு விருத்திக்கும் கேடு விளைவிக்கின்ற செயலைச் செய்கின்றமை பாரதூரமான விடயமாகும்.
03)வகுப்பறையில் 43 இலெச்சம் மாணவர்களின் கல்வியில் பிரதான பொறுப்பினை வகிப்போர் ஆசிரியர்களேயன்றி வேறெவரும் இல்லை என்பதோடு அவர்கள் கற்கின்ற பாட விதானங்களைத் தயாரித்துக் கற்பித்தல் தேர்ச்சியினை ஏற்படுத்தி மிகவும் திறமையான ஆசிரியர்களை வகுப்பறைக்குள் அனுப்புவதும் அவர்களுக்கு உரிய வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பாகும்.
அதற்கமைய அது தொடர்பாக விசேடமாக அவதானத் செலுத்தி இந்த வருட வரவு செலவுத் திட்டத்தினூடாக உரிய ஒதுக்கீட்டை ஒதுக்கி நடைமுறையில் உள்ள கட்டணத்துக்கு அமைவாக பாடநெறியை முன்னெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது சங்கமானது மிகுந்த தேவைப்பாட்டுடன் கேட்டு நிற்பதாக உப தலைவர் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.