கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வரலாறு பாடத்தின் போது ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு உதவுதாக நடித்து பாலியில் துன்புறுத்தல் மேற்கொண்ட சம்பவத்தை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாச்சதுவ, திேதாகம களுவில சேன மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்தில் மாணவிக்கு பாலியில் தொல்லை வழங்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜுன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு்ள்ளார்.
25 ஆம் திகதி இடம்பெற்ற வரலாறு பாட வினாப் பத்திரத்தின் போது, வினாப்பத்திரங்களுக்கான விடைகளை எழுத உதவுதாக பாசாங்கு செய்து குறித் மாணவியை முத்தமிட்டுள்ளதுடன் பின்னர், இடைவேளையின் போது மாணவியின் மார்பு பகுதியை தடவியுள்ளதாக மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினமே நிகழ்வு பற்றி மாணவி, ஆசிரியை ஒருவருக்குத் தெரிவித்துள்ளதுடன், மறுநாள் 26 ஆம் திகதி நிதோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு, குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதி மன்றி்ல் ஆஜர் செய்யப்பட்டு பின்னர், ஜுன் 2 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாச்சதுவ புதிய நகரத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த நிகழ்வை பணம் வழங்கி மறைப்பதற்கு ஆசிரியர் தரப்பில் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிதத மாணவி உயர் தரம் கற்றுக்கொண்டிருப்பதாகவும் வரலாறு பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெறுவதற்காக மீண்டும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.