மத்திய மாகாண தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனம்: இப்போதைக்கு சாத்தியமில்லை

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுன்றின் சபை ஒத்திவைப்பு வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த நியமனம் தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்று நிருபமே குறித்த நியமனங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாணம் மாத்திரம் இன்றி நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த நியமனங்கள் ஏனைய மாகாணங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ளவும் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்தநிலையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதும், அவர்களை விரைவில் சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன் இந்த விடயம் மத்திய மாகாண சபையின் கீழ் உள்ளது. எனவே இதற்கான அழுத்ததை மாத்திரமே கல்வி அமைச்சு வழங்க முடியும என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர் நோக்குகிறது. இப்பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீரும் என்று நம்புகிறோம். எனவே விரைவில் நியமனங்களை வழங்க முடியம் என நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!