பாடசாலை வாசிகசாலைகளுக்கு பொருத்தமான நூல்களை இனங்காண்பதற்கும் அதற்கான அனுமதியைப்பெற்றுக் கொள்வதற்கும் கல்வி அமைச்சு வருடாந்தம் கோரும் விண்ணப்பத்தை இவ்வருடமும் கோரியுள்ளது.
தமிழ், சிங்களம், ஆங்கில மொழியில் அமைந்த நூல்களுக்கு இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.
பின்வரும் துறைகள் சார்ந்த நூல்கள் சமர்ப்பிக்கப்பட முடியும்.
1. மொழி மற்றும் இலக்கியம்
(தமிழ், சிங்கள, ஆங்கில நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகள்)
2. சமயங்கள்
3. சிறுவர் நூல்கள்
4. விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம்
5. தகவல் தொடர்பாடல்
6. அழகியல்
7. சமூக விஞ்ஞானம்
8. ஏனைய இலக்கிய பெறுமானம் கொண்ட நூல்கள்
9. மொழி பெயர்ப்புக்கள்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிடும் நூல்களுக்கு சமாந்திரமாக தயாரிக்கப்பட்டுள்ள நூல்களுக்கு இந்த அனுமதிப் பத்திரம ்வெளியிடப்படமாடட்டாது
ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தார், கல்வி அமைச்சின் 5 ஆம் மாடியில் உள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆலோசனை சபைக்கு தமது நூல்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0112784839 என்ற இலக்கத்தை அலுவலக நேரங்களில் அழைத்து பெற்றுக் கொள்ளலாம்.