இன்றைய அரச வர்த்தமானி (06.03.2020)
பதவிகள் – வெற்றிடம்
01. இலங்கை வான்படை
இலங்கை நிரந்தர/ தொண்டர் விமானப் படைவான் படை வீரர் / வீராங்கனைகளுக்கான வெற்றிடங்கள்
பயிலிளவல் ஆண் / பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்
அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்
பரீட்சைகளும் பரீட்சைப் பெறுபேறுகளும் பிறவும்
02. அரசாங்க சேவை ஆணைக்குழுநிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019/ 2020
கல்வித் தகைமைகள் :
(i)பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு சித்தியுடனான பட்டமொன்றைப் பெற்றிருத்தல் அல்லது
(ii)உயர் நீதிமன்றச் சட்டத்தரணியொருவராக இருத்தல் அல்லது
(iii)பட்டயக் கணக்காளரொருவராக இருத்தல்.
03. தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்
சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள், மற்றும் புள்ளி விபரவியலாளர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2014 (2020)
புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் II இற்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2013(2020)
தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் I இற்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2014 (2020)
04. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ஷராட்சிகள் அமைச்சு
கிராம அலுவலர் சேவையின் I ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை-2019 (2020)