சமயப் பாட போதனைகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டிருந்த தர்மாசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் சமய விவகாரங்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பான அண்மைய முடிவுகளை அறிவித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சமயத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டங்களும் தனித்தனியாக நடைபெற்றன. இதன் போது தர்மாசிரியர் நியனம் தொடர்பான வியடங்கள் முக்கியமாக ஆராயப்பட்டன.
கல்வி அமைச்சு 2018.08.31 அன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் அதன் பின்னர் இணைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ரத்துச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது சகல சமயங்களுக்கும் பொதுவானதாக அமைவதோடு எதிர்வரும் மாதத்தில் இதற்கான பரீட்சை நடைபெற்று விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே. ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 35 ஆகக் காண்படுவதோடு அதில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து மாற்றங்களும் ரத்துச் செய்யப்படுகின்றன.
அவ்வாறே முதலாவது வர்த்தமானியின் பிரகாரம் ஒவ்வொரு சமயத்தவர்களுக்கும் அடிப்படை தகைமைகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படைக் கல்வி தகைமை
க.பொ.த, சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களத்தில் சித்தி பெற்றிருத்தல் மற்றும்
உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
என்பவற்றோடு
இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு
மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்து சமயப் பாடம் கற்பிப்பதற்கு
இந்து தர்மாசிரியர் பரீட்சையில் சித்திடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 28.2.2019
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ள