11 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க முன்னர், பாடசாலைகளின் பெற்றார் கூட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்றய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கருத்துத் தெரிவித்தார்.
“இந்த வாரம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பெற்றார்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வகுக்கப்பட்டுள்ள திட்டத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் இருந்தால், பெற்றோர் வந்து கலந்துரையாடி திட்டத்தை வலுப்படுத்தலாம்.” என்றார்