தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர அலுவலர் 11ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச்
செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018(2019)
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் நிலவூம் புள்ளிவிபர அலுவலர் பதவியின் 11 ஆம் தரத்திற்கு தகுதியூள்ள 98 பேரைத் தெரிவூ செய்யூம் திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கோரப்படுகின்றன.
இப்பரீட்சை 2019, யூஷுன் மாதம் கொழும்பில் மாத்திரம் நடாத்தப்படும்.
இந்த அறிவித்தலின் இறுதியில் காணப்படும் மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு இணங்க மட்டும் தயாரிக்கப்பட்ட
விண்ணப்பப்படிவங்களை கீழ்க் குறிப்பிடப்படும் விண்ணப்பம் கோரும் இறுதி திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ”பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்புக் (நிறுவனம்சார் மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், பெலவத்த, பத்தரமுல்லை”” எனும் முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
அத்திகதியின் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பப்படிவம் சேர்த்தனுப்பும் கடித உறையின் இடப்பக்க மேல் மூலையில் ”புள்ளிவிபர அலுவலர் பதவியின் 11 ஆம் தரத்திற்கு
ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை”” என தௌpவாகக் குறிப்பிடுதல் வேண்டும். பரீட்சையின் பெயரை தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் ””Open Competitive Examination for Recruitment of Officers to Grade II of the Post of Statistical Officer”” என குறிப்பிடுதல் வேண்டும்
கல்வித் தகைமைகள்.-
புள்ளிவிபரம், கணிதம், பொருளியல், கணினி, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், மக்களியல், புவியியல், சமூகவியல் போன்ற பாடங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தை உள்ளடக்கி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து
பெற்றுக் கொண்ட பட்டமொன்றை கொண்டிருத்தல் வேண்டும்.