அரசாங்க பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை முறையாக அதிகரிப்பதற்கு அமைவாக இந்த மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யப்படும் தேவையை கவனத்தில் கொண்டு 2020 -2023 வரையிலான இடைகால வரவு செலவு கட்டமைப்பின் கீழ் வடமேல் யாழ்ப்பாணம் ஸ்ரீ ஜயவர்தனபுர பேராதெனிய மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதகளை அபிவிருத்தி செய்வதற்காக 13 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வடமேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியை கற்பிக்கும் பிரிவின் விரிவுரை மண்டபத்தை அமைத்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சித்த வைத்திய விஞ்ஞான பிரிவுக்கு 5 மாடி கொண்ட கட்டிடம் ஒன்றின் 4ஆம் மற்றும் 5 ஆம் மாடிகளின் பணிகளை பூர்த்தி செய்தல் இந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா பீடத்தின் வணிக கல்வி பீடத்திற்கான கட்டிடம் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்துதல் நிர்வாக கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் கல்வி மற்றும் நிறைவேற்று பணியாளர்களுக்கான 3 மாடி கட்டிடம் ஒன்று மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கான 2 மாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல் தொழில்நுட்ப மற்றும் பௌதீகவியல் கட்டமைப்பு தொழில்நுட்பத்துக்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கான உத்தேச கட்டிடத்தை விரிவுப்படுத்துதல் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்காக புதிய சிற்றூண்டிசாலையை நிர்மாணித்தல் மற்றும் அங்கு பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை விரிவுப்படுத்துதல் மற்றும் களணி பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் முகாமைத்துவ கல்வி பீடத்துக்காக 10 மாடி கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் போன்றவற்றுக்காக திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான வசதிகளை செய்வதற்காக நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்கிய ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.