1.1. இந் நியமனங்கள் வழங்கள் மற்றும் நிலைப்படுத்தலானது இல. 1984 மற்றும் 2016.09.09ம் திகதியுடைய இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகளுக்கமைய (தரவுத் தொகுதி முறைமையூடாக) காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெற்றிடங்களுக்கமைவாக மேற்கொள்ளப்படும்.
1.2. இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க முன்னர் இத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் அனைத்தினையும் வாசித்து புரிந்து கொள்ளவேண்டும்.
1.3. தாங்கள் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாணத்திலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்களுக்காக நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
1.4. நிலைப்படுத்தலானது நீங்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கி தேசிய கல்வி நிறுவகத்தின் பெறுபேற்றுப் பட்டியலில் தங்கள் பாடத்திற்குரிய திறமைகளின் இறங்குவரிசை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
1.5. தாங்கள் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் போதிருந்த நிரந்தர முகவரியிலிருந்து தற்போதைய நிரந்தர முகவரி மாறுபடுமானால் அதற்கான தகுந்த காரணங்களுடன் புதிய முகவரியை தரவு முறைமைக்குள் உட்செலுத்த வேண்டும். எனினும் தாங்கள் உட்செலுத்தும் புதிய முகவரிக்குரிய மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட வெற்றிடங்கள் மற்றும் மாகாணப் பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்களை பரீட்சிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்பதுடன் தங்கள் விருப்புக்குரிய பாடசாலைகளை வரிசைப்படி தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
1.5.1. எவரேனும் பயிலுனர் ஒருவர் தமது புதிய நிரந்தர வதிவிடத்திற்குரிய மாகாணத்திற்கு வெளியிலுள்ள பாடசாலை ஒன்றில் நிலைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின், அது தொடர்பாக requests/ comments குறிப்பிட்டு தங்கள் கோரிக்கைக் கடிதத்தை அத்துடன் தொடர்பான ஏனைய ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
1.6. அவ்வாறிருப்பினும் மேலே 1.5 இன் படி தங்கள் நிரந்தர வதிவிட மாற்றத்தின் அடிப்படையில் புதிய முகவரிக்கமைவாக தங்களை நிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டாலும் நிலைப்படுத்தலை மேற்கொள்ளும் போது கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் போது அம் மாகாணங்களிலிருந்து இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதுடன் அவர்களை வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளில் நிலைப்படுத்தியதன் பின்னரும் வெற்றிடங்கள் காணப்படின் மாத்திரமே நீங்கள் அங்கு நிலைப்படுத்தப்படுவீர்கள். இதன்போது தங்கள் திறமைகள் எதுவும் கருத்திள் கொள்ளப்படமாட்டாது.
1.7. அதிபர்களால் வழங்கப்படும் வெற்றிடங்கள் தொடர்பான கடிதங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.
1.8. தேசிய பாடசாலைகளில் நிலைப்படுத்தப்படும் பயிலுனர்களின் நியமனங்கள் இவ் அமைச்சினால் வழங்கப்படும் என்பதுடன் மாகாணப் பாடசாலைகளில் நிலைப்படுத்தப்படவிருக்கும் பயிலுனர்களின் பெயர்பட்டியல்கள் உரிய மாகாணங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் அம் மாகாணங்களுக்குரிய பொதுச் சேவைகள் ஆணைக்குழு அல்லது மாகாணக் கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்படுவார்கள்.
1.9. மாகாணப் பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பாக மாகாண செயலாளரும் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிலைப்படுத்தல்கள் தொடர்பாக கல்விச் செயலாளருமே இறுதித் தீர்மானம் எடுக்க அதிகாரம் கொண்டவர்களாவர்.
1.10. இந் நிகழ்நிலை விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதற்குத் தேவையான வசதிகளை தங்களுக்கு மிகவும் அருகிலுள்ள கல்வியியல் கல்லூரிகள், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப வள நிலையங்கள் – PICTEC வலயக் கல்விக் காரியாலயத்தின் தகவல் தொழில்நுட்ப வள நிலையங்கள் –ZICTEC ஆகியனவற்றினூடாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
1.11. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அல்லது அது போன்ற விடயங்களால் உரிய திகதிக்கு முன்னர் இந் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தை நிரப்ப இயலாதவர்கள் இது தொடர்பாக உடனடியாக உதவித் தொலைபேசி இலக்கங்களுடன் (Help Desk) தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும்.
1.12. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் பிரசுரிக்கப்படும் இவ் அறிவுறுத்தல்களில் மொழி சார்ந்த முரண்பாடுகள் தோன்றின் சிங்கள மொழி மூலமான அறிவுறுத்தலே சரியானது எனக் கருத்தப்படும்
2. இணையத்தளத்தை உபயோகித்தல் தொடர்பான அறிவுரைகள்
2.1. தகவல்களை உட்செலுத்துவதற்காக ஒரு விண்ணப்பதாரி ஒரு தடவை மட்டுமே இணையத்தளத்தினுள் பிரவேசிக்க (Login) முடியும். ஆகையால் சகல விண்ணப்பதாரர்களும் இவ் அறிவுரைகளுக்கமைவாகவே நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தை நிரப்பவேண்டும் என்பதுடன் அதில் குறிப்பிடப்படும் தகவல்களை பின்னர் மாற்றத்திற்குட்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. வேறு முறைகளில் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் யாவும் நிராகரிக்கப்படும்.
2.2. சரியான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட் செலுத்துவதனூடாக மட்டுமே இணையத்தளத்தினுள் பிரவேசிக்க (Login) அனுமதி வழங்கப்படும். அவ்வாறு தரவு முறைமைக்குள் பிரவேசிப்பதில் பிரச்சனைகளை எதிர்நோக்குபவர்கள் உதவி தொலைபேசி இலக்கங்களூடாக (Help Desk) தொடர்பு கொள்ள முடியும்.
2.3. நீங்கள் தரவு முறைமைக்குள் பிரவேசிக்கும் தருணத்தில் உங்கள் தாய்மொழியை தெரிவு செய்யுங்கள். தகவல்களை வாசித்து புரிந்துகொண்டதன் பின்னர் மாத்திரம் உரிய இடத்தில் (☑) எனும் குறியிடுக.
2.4. அதன் பின்னர் Proceed இனை (Click) அழுத்துக.
2.5. சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினை உட் செலுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
2.6. இதன்போது தங்கள் திரையின் இடது பக்கத்தில் தற்போது தரவு முறைமையில் இருக்கும் தங்கள் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
2.7. அதன் பின்னர் திரையின் வலது பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி Next இனை (Click) அழுத்துக.
2.8. அதன் பின்னர் கிடைக்கப்பெறும் பட்டியலில் தங்கள் விருப்பின் அடிப்படையில் வரிசையாக வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளை தெரிவு செய்யலாம். இதற்காக வெற்றிடங்களை தெரிவுசெய்தல் தொடர்பான அறிவுரைகளை வாசியுங்கள், அதன் பின்னர் தகவல்களை உட்செலுத்துவதற்காக (Submit) சமர்ப்பியுங்கள். தங்களால் உட்செலுத்தப்பட்ட தகவல்களின் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
2.9. தங்களுக்கு இது தொடர்பாக மேலும் கோரிக்கைகள் இருப்பின் அதுபற்றி requests/ comments பகுதியில் குறிப்பிட்டு Complete>>Confirm இனை (Click) அழுத்துக. அவ்வாறு அழுத்தியதன் (Click) பின்னர் உட்செலுத்தப்பட்ட தகவல்களை மாற்ற அனுமதி வழங்கப்படமாட்டாது.
2.10. நீங்கள் உட்செலுத்திய சகல தகவல்களினதும் சாராம்சத்தினை IV கட்டத்தில் நன்றாகப் பரீட்சித்துப் பார்த்து அதில் ஏதும் பிரச்சனைகள் இருப்பின் உதவிக்கான தொலைபேசி இலக்கமொன்றூடாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
2.11. அதன் பின்னர் Download Icon இனை அழுத்துவதனூடாக PDF பிரதியாக தங்கள் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு பதிவிறக்கம் செய்துகொண்ட PDF பிரதியை அச்சிட்டு முழுமையாக நிரப்பிய விண்ணப்பப்படிவத்தை சமாதான நீதிவான் ஒருவரால் உறுதிப்படுத்தி உதவிச் செயலாளர், ஆசிரியர் தாபனப் பிரிவு, கல்வி அமைச்சு, இசுருபாய, பெலவத்த, பத்தரமுல்ல எனும் முகவரிக்கு 2020.12.20ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பி வைத்தல் வேண்டும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் NCOE Deployment -2020 என கட்டாயம் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
2.12. அவ் விண்ணப்பப்படிவத்தின் பிரதியொன்றை தங்களிடம் வைத்திருப்பது எதிர்காலத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும்.
2.13. மேலே 2.11 இல் கூறப்பட்டுள்ள வன் பிரதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3. வெற்றிடங்களை தெரிவுசெய்வதற்கான அறிவுரைகள்
3.1. தங்கள் பாடம் மற்றும் மொழிமூலத்திற்குரிய தரவு முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை, தேசிய பாடசாலைகளில் பாடசாலை அடிப்படையிலும், மாகாண பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்கின்றனவா என மட்டும் குறிப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
3.2. தோட்டப்புற துறை மற்றும் அது சார்ந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர்கள் அவர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாகாணங்களுக்குரிய தோட்டப்புற பாடசாலைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் வெற்றிடங்கள் இல்லாததால் அவர்கள் மாகாணப் பாடசாலைகளுக்கே விண்ணப்பிக்க வேண்டும்.
3.3. தங்கள் பாடத்திற்கு அல்லது மொழிமூலத்திற்கு தாங்கள் நியமனம் செய்யப்படும் மாகாணத்தில் மாகாண அல்லது தேசிய பாடசாலைகளில் வெற்றிடங்கள் இல்லாதிருப்பின் பாடசாலைகளைத் தெரிவு செய்யும் பகுதியில் வேறு மாகாணங்கள் எனும் பகுதியினை (Option) தெரிவு செய்து requests/ comments பகுதியில் தங்களுக்கு விருப்பமான 03 மாகாணங்களை விருப்பு வரிசைப்படி குறிப்பிடுங்கள்.