Interest Free Student Loan Scheme (IFSLS) for Degree Programs – Ministry of Education
Interest Free Student Loan Scheme (IFSLS) for Degree Programs – Ministry of Education
வட்டி இல்லாத மாணவர் கடன் யோசனைத் திட்டம்
கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
6 வது உட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்
க. பொ.த (உயர்தர) பரீட்சையில் 2018 , 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
எவ்வாறு விண்ணப்பிப்பது
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு www.studentloans.mohe.gov.lk இணையத்தளத்தின் மூலமாக இலகுபடுத்தப்பட்டுள்ள நிகழ் நிலை(Online) முறைமையைப் பயன்படுத்த வேண்டும்.
நிகழ் நிலை விண்ணப்பங்களை 21 டிசம்பர் 2021 முதல் ஜனவரி 31, 2022 அன்று மதியம் 12.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகள்
- மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் குறைந்த பட்சம் சாதாரண சித்தி (S) மூன்று அமர்வுகளுக்கு மேற்படாமல் பெற்றிருத்தல் வேண்டும், மற்றும்,
- மேலே (i) இல் விவரிக்கப்பட்டுள்ள எந்தவொரு அமர்விலும் பொதுச் சாதாரண பரீட்சையில் குறைந்த பட்சம் 30 புள்ளிகள் பெற்றிருத்தல் அல்லது அதிகபட்சம் மூன்று அமர்வுகளின் நிபந்தனைக்கு உட்பட்டு 2020 ஆம் ஆண்டில் பொதுச் சாதாரண பரீட்சையில் மீள தோற்றியிருத்தல்.
- a) க. பொ.த (உயர்தர) பரீட்சையில் பொது ஆங்கிலத்தில் சாதாரண சித்தி (S) அல்லது க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் ஆங்கிலத்தில் சாதாரண சித்தி (S) இனை பெற்றிருத்தல்.
அல்லது
b) மாணவர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடிப்படைப் பாட நெறியுடன் இணைந்ததாக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் நிபுணத்துவ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். - விண்ணப்பதாரர்களின் வயது, 2022 ஜனவரி 31 ஆம் திகத்திற்கு 25 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வேறு தகைமைகள்
தயவு செய்து மாணவர் கையேட்டினை பார்வையிடவும். www.studentloans.mohe.gov.lk
தெரிவு செய்யும் கோட்பாடுகள்
பொருத்தமான பாட நெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதானது பின்வரும் அடிப்படை களை கொண்டதாக இருக்கும்,
- குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகளை பெற்றிருத்தல்
- பட்டப் பாட நெறிகளுக்கு அவர்களால் வழங்கப்படும் முன்னுரிமை விருப்புத் தொடரொழுங்கு
- சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களால் பட்டப் பாட நெறிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை
- பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் இருக்கை கொள்ளளவினை விட அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர்கள் க. பொ.த (உயர்தர) பரீட்சையில் பெற்ற Z- புள்ளிகளின் தகுதி வரிசையில் தேர்வு செய்யப்படுவர்.
உயர்ந்தபட்ச கடன் தொகை
கடன் வடிவம் | 3 வருட பட்டப் பாட நெறி | 4 வருட பட்டப் பாட நெறி |
பாட நெறிக் கட்டணம்* | Rs. 600,000 | Rs. 800,000 |
Stipend கடனுதவி** | Rs. 225,000 | Rs. 300.000 |
* முழு பட்டப் பாட நெறியினையும் மேல் குறிப்பிட்ட கடன் தொகையைக் கொண்டு முழுமையாகத் தொடரலாம்.
** காலாண்டுக்கு ஒருமுறை Stipend எனும் கடனுதவித் தொகை ரூ. 18,750/- (மாதம் ரூ. 6,250/-) மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கடன்களை எவ்வாறு பெறுவது
கல்வி அமைச்சானது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கு இலங்கை வங்கிக்கு சிபாரிசு செய்கிறது மற்றும் மாணவர்கள் தமது கடன் விண்ணப்பத்தை இரண்டு பிணையாளர்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். (பெற்றோரில் ஒருவர் மற்றும் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக இருக்க வேண்டும்). அவர்களின் பொருளாதார நிலை இந்த கடன் திட்டத்திற்கு பரிசீலிக்கப்படமாட்டாது.
கற்கைகளின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் பரிந்துரையின் படி செமஸ்டர் வாரியாக செமஸ்டர் கட்டணம் செலுத்தப்படும்.
மாணவர்களது பொறுப்பு
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் வசதியளிக்கப்படும் அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் பொதுத் தேர்ச்சி (“C” சித்தி) பெற வேண்டும் மற்றும் அவர்களின் படிப்பு நேரத்தில் 80% வருகையைப் பராமரிக்க வேண்டும்.
எவ்வாறு திருப்பிச் செலுத்துவது
IFSLS இற்குரிய மொத்த கடன் காலம் 12 ஆண்டுகளாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்துவது கற்கைக் காலத்தின் பின்னராகும் மற்றும் ஒரு வருட கால அவகாசத்திற்குப் பிறகு தொடங்கப்பட வேண்டும்.
பட்டப் பாட நெறிக்கான கால எல்லை | கடன் சலுகைக் கால எல்லை |
திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் தவணைகளின் எண்ணிக்கை |
3 வருடங்கள் | 1 வருடங்கள் | 4 வருடங்களின் பின்னர் 96 சம தவணைககளில் 8 வருடங்களுக்குள் |
4 வருடங்கள் | 1 வருடங்கள் | 5 வருடங்களின் பின்னர் 84 சம தவணைககளில் 7 வருடங்களுக்குள் |
IFSLS இன் கீழ் உள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்
எண் | அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் |
1. | ஸ்ரீ லங்கா இன்ஸரிரியுட் ஒப் இன்பர்மேசன் டெக்னொளஜி (கரன்டி) லிமிட்டட் நிறுவனம் – SLIIT |
ii. | தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் – NSBM |
iii. | சினெக் கெம்பஸ் – CINEC |
iv. | இலங்கை பௌத்த கற்கை நிறுவனம் – SIBA |
v. | இலங்கை பட்டயக் கணக்காளர்களின் நிறுவனம் – ICASL |
vi. | சனச கெம்பஸ் லிமிட்டட் நிறுவனம் – SANASA |
vii. | ஹோரைசன் கல்லூரி ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொளஜி லிமிட்டட் – HORIZON |
viii. | காட்சு ஹைலி அட்வான்ஸ் மெடிக்கல் டெக்னொளஜி ரெயினிங் சென்ரர் (பிரைவட்) லிமிட்டட் நிறுவகம் – KIU |
ix. | எஸ். எல். ரி. கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டட் – SLTC |
x. | சீகிஸ் கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் – SAEGIS |
xi. | ஈசொப்ட் மெட்ரோ கம்பஸ் – ESOFT |
xii. | அக்வய்னஸ் உயர் கல்வி விஞ்ஞான நிறுவகம் – AQUINAS |
xiii. | இன்ஸ்டிடியூட் ஒப் கெமிஸ்ட்ரி சிலோன் – ICHEM |
xiv. | இன்டர் நெஷனல் கொலேஜ் ஒப் பிஸினஸ் டெக்னொலோஜி – ICBT |
xv. | பெனடிக் கெதலிக் இன்ஸ்டிடியூட் – BCI |
xvi. | றோயல் இன்ஸ்டிடியூட் கொழம்போ (பிரைவட்) லிமிட்டட் – RIC |
xvii. | பிஸ்னஸ் மெனேஜ்மன்ட் இஸ்கூல் (பிரைவட்) லிமிட்டட் – BMS |
xviii. | இன்டர் நெஷனல் இன்ஸ்டிடியூட் ஒப் ஹெல்த் சயன்ஸ் – IIHS |