2022 மற்றும் 2023 வருடங்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாப் பத்திரங்களை அத்தியவசியக் கற்றல் உள்ளடக்கத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்குமாறு கல்வி அமைச்சு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள ED/01/103/03/02 இலக்கம் கொண்ட கடிதத்தில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022.07.09 மற்றும் 2022.08.16 ஆகிய திகதிகளில் ஒன்லைன் வாயிலாக தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சின் அதிாரிகள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் அடிப்படையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரம் ஆகியவற்றுக்கான வினாப் பத்திர உள்ளடக்கம் தொடர்பாக பின்வரும் அம்சங்கள் தீர்மானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை
முதலாவது வினாப் பத்திரம் – தரம் 3, 4, 5 ஆகியவற்றுக்கான அத்தியவசிய கற்றல் உள்ளடக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் 14 ம்
இரண்டாவது வினாப் பத்திரம் – தரம் 3, 4,5 ஆகியவற்றுக்காக இனங்காணப்பட்ட அத்தியவசியக் கற்றல் உள்ளடக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டும் தயாரிக்கப்படும்.
க.பொ.த சாதரரண தரப் பரீட்சை
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள தரம் 10, 11 ஆகியவற்றுக்கான அத்தியவசியக் கற்றல் உள்ளடக்கங்ளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடங்களுக்கும் வினாப்பத்திரம் தயாரிக்கப்படும்
இந்த சீர்த்திருத்தம் 2022 மற்றும் 2023 ஆகிய இருவருடங்களில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானத்தை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Essential Learning Contents 2022 – for First, Second & Third Term