ஜுலை மாதம் 22 ஆம் திகதியளவில் இலங்கைக்கு பெற்றோல் ஏற்றிய கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்படும் கப்பல் வருவதற்கு முன்னர் இருப்புக்களை பாதுகாப்பதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
ஜூலை தொடக்கத்தில் ஒரு டீசல் கப்பல் எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் பெட்ரோல் கப்பல் ஒன்றைப் பெற முயற்சிக்கிறது, இருப்பினும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு குறித்த விபரத்தை தெரிவித்தார்.
எரிபொருள் இருப்பு குறித்த தகவல்கள் பின்வருமாறு:
இலங்கையில் தற்போது 11,000 MT டீசல், 5,000 MT பெற்றோல், 30,000 MT மண் எண்ணெய் மற்றும் 800 MT ஜெட் எரிபொருள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.