பாடசாலை மாணவர்களுக்காக நாளை (01) முதல் விசேட பஸ் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கம்பஹா, ஹொரணை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, காலை 7.30 மணிக்கு அந்தந்த பேருந்துகள் மூலம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, பாடசாலை முடிந்ததும் பேருந்துகள் திரும்பும் இடத்துக்குச் செல்லும்.
இதற்காக சுமார் 40 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.