அறநெறிப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை
இந்து சமயம் – 2018 (2020)
பரீட்சை நிபந்தனைகளும் பாடத்திட்டமும்.- மேற்படி பரீட்சை 2020 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதத்தில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்களினால் இலங்கை முழுவதும் நடாத்தப்படும்.
2. பரீட்சை நடைபெறும் நிலையங்கள்.- விண்ணப்பதாரிகளின் தொகைக்கேற்ப நாட்டின் அனைத்து மாவட்டங்
களிலும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும். எனினும் குறிப்பிட்ட தொகையான விண்ணப்பதாரிகள் ஒரு பரீட்சை நிலையத்திற்கு விண்ணப்பிக்காத பட்சத்தில் அப்பரீட்சை நிலையம் இரத்துச் செய்யப்பட்டு அருகிலுள்ள வேறொரு பரீட்சை நிலையத்தில் தோற்றுமாறு விண்ணப்ப
தாரிகள் கோரப்படுவர். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள நகரங்கள் தொடர்பான விபரங்கள் இவ்வறிவித்தலின் இறுதியிலே சேர்க்கப்பட்டுள்ள இணைப்பு 1 இல் காட்டப் பட்டுள்ளன.
3. மொழிமூலமும் பாடத்திட்டமும் :
3.1 இப்பரீட்சைக்குரிய பாடத்திட்டம் பின்னிணைப்பு 02 இல் காட்டப்பட்டுள்ளது.
3.2 இப்பரீட்சை தமிழ் மொழியில் மாத்திரம் நடாத்தப்படும்.
4. தகைமை.- இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் விண்ணப்பதாரி கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகைமையைக் கொண்டவராக இருத்தல் வேண்டும் :-
4.1 இப்பரீட்சை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவூசெய்யப்பட்ட இந்து அறநெறிப் பாடசாலைகளில் பயிலும் மேற்பிரிவூ மாணவர்களுக்கானது. மேற்பிரிவில் பத்தாம் ஆண்டில் சித்திபெற்றுஇ
பதினோராம் ஆண்டில் கல்வியை மேற்கொள்பவர்களும் ஏற்கனவே இப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடையாதவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்ற முடியூம்.
குறிப்பு.- (அ) இப்பரீட்சைக்குத் தோற்றவூள்ள விண்ணப்பதாரி மேற்குறித்த தகைமையைப் பெற்றுள்ளார் என்பதனை இந்து அறநெறிப் பாடசாலையின் அதிபர் அல்லது பொறுப்பாளர் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(ஆ) பதிவூசெய்யப்பட்ட அறநெறிப் பாடசாலையொன்றின் ஊடாக மட்டுமே இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியூம்.
5. கடந்த ஆண்டில் மாணவர்களைப் பரீட்சைக்கு அனுப்பி வைத்த எல்லா இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கும் போதுமான விண்ணப்பப்படிவங்களும் அறிவூறுத்தல்களும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பப் படிவம் கிடைக்காத அல்லது 2017 (2019) ஆம் ஆண்டுப் பரீட்சைக்கு விண்ணப்பதாரிகளை அனுப்பாத இந்து அறநெறிப்
பாடசாலை ஆயின் பாடசாலையின் பெயர், முகவரி, தோற்றவூள்ள விண்ணப்பதாரிகளின் தொகை போன்ற விபரங்களைக்
குறிப்பிட்டு 5.3 பிரிவிற் குறிப்பிட்ட முகவரிக்கு 2019.12.13 ஆந் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் :
5.1 விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2019.12.27 ஆந் திகதி ஆகும்.
5.2 விண்ணப்பப்படிவங்கள் தெளிவாகவூம் பிழையின்றியூம் நிரப்பப்படல் வேண்டும். அங்ஙூனம் நிரப்பப்படாத விண்ணப்பங்களும் இறுதித் தினத்திற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
5.3 பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பதிவூத்தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் :-
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு, (நிறுவனம் சார் மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், தேசிய மதிப்பீட்டிற்கும், பரீட்சித்தலுக்குமான சேவை,
பெலவத்தை, பத்தரமுல்லை.
விண்ணப்பங்கள் கிடைத்தமை தொடர்பாக அறிவிக்கப்படமாட்டாது.
5.4 விண்ணப்பங்களை இணைத்து அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”அறநெறிப் பாடசாலை
இறுதிச் சான்றிதழ் பரீட்சை – இந்து சமயம் – 2018 (2020)”” எனவூம்இ பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பிக்கும்
நகரமும் குறிப்பிடப்படல் வேண்டும்.
5.5 விண்ணப்பங்களோடு எவ்வித சான்றிதழ்களையூம் இணைத்து அனுப்பக்கூடாது. இந்து அறநெறிப்
பாடசாலையின் அதிபர் அல்லது பொறுப்பாளர், விண்ணப்பதாரி குறித்த தகைமையைப் பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
6. பரீட்சைக் கட்டணம்.- முதற்தடவையாகத் தோற்றுபவர்கள், பரீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஏனையோருக்கான பரீட்சைக் கட்டணம் ரூபா 200 ஆகும். நூன சித்திபெற்ற பாடமொன்றிற்கு ரூபா 50 ஆகும் :
6.1 பரீட்சைக் கட்டணம் செலுத்தவேண்டிய விண்ணப்பதாரிகள் (தமது அறநெறிப் பாடசாலை முதல்வரூடாக) நாட்டின் எந்தவொரு தபால் நிலையத்திலும் உரிய பணத்தைச் செலுத்திஇ பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டினை விண்ணப்பப்படிவத்தின் மறுபுறத்தில் ஒட்டி அனுப்பவேண்டும். (முத்திரை- காசுக் கட்டளை மூலமாக பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்த முடியாது.) பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 20-03-02-13 இன்கீழ் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.
6.2 அறநெறிப் பாடசாலை முதல்வர்கள் உரிய பரீட்சார்த்திகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பரீட்சைக் கட்டணத்தை மொத்தமாக அருகாமையிலுள்ள தபாலகத்தில் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் பற்றுச் சீட்டை விண்ணப்பப்படிவத்தின் மறுபுறத்தில் ஒட்டி அனுப்புதல் வேண்டும்.
6.3 எக்காரணம் கொண்டும் இப்பரீட்சைக்குச் செலுத்தப்பட்ட கட்டணம், வேறொரு பரீட்சைக்கு மாற்றப்படவோ, மீளப்பெறவோ இயலாததாகும்.
7. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் உரிய அறநெறிப் பாடசாலை அதிபர்கள்ஃ பொறுப்பாளர்கள் மூலமாக விநியோகிக்கப்படும்.
7.1 சகல விண்ணப்பதாரிகளும் தாம் முதலாவதாகப் பரீட்சைக்குத் தோற்றும் சந்தர்ப்பத்திலேயே தமது கையொப்பம் சான்றுறுதி செய்யப்பட்ட அனுமதி அட்டையை பரீட்சை நிலைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரி ஒருவர் தமது அனுமதி அட்டையைச் சமர்ப்பிக்காத போதோ அல்லது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்ட பரீட்சை நிலையம் தவிர்ந்த வேறொரு நிலையத்தில்
தோற்றும் போதோ அவரது பரீட்சார்த்தித் தகவூ இரத்துச் செய்யப்படும்.
7.2 அனுமதி அட்டையில் விண்ணப்பதாரியின் கையொப்பம்இ இந்து அறநெறிப் பாடசாலை அதிபர் மூலம் குறித்த
விண்ணப்பதாரிகளுடையது என உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
7.3 பரீட்சை நடைபெறுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் அனுமதி அட்டைகள் கிடைக்காதவிடத்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இந்து அறநெறிப் பாடசாலையின் அதிபர், இவ்விடயத்தைப் பரீட்சைகள்
ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படல் வேண்டும் :
1. பரீட்சையின் பெயர்
2. அறநெறிப் பாடசாலையின் பெயர்
3. விண்ணப்பதாரியின் முழுப்பெயரும் விலாசமும்
4. விண்ணப்பித்த பரீட்சை நிலையம்ஃ நகரம்
5. விண்ணப்பங்களைப் பதிவூத்தபால் மூலம் அனுப்பி வைத்த தபால் நிலையம்
6. பதிவூ இலக்கமும் திகதியூம்.
8. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தல்.- இந்து அறநெறிப் பாடசாலை ஒன்றின் மூலம் தோற்றும் மாணவர்கள்
பரீட்சை நிலையத்தில் ஒவ்வொரு பாடத்திற்குத் தோற்றும் சந்தர்ப்பத்திலும்இ பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் ஏற்றுக்
கொள்ளத்தக்கவாறு தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்குத் தயாராகச் சமுகமளித்தல் வேண்டும். இதற்கு கீழ்வரும் ஆவணங்களுள் ஒன்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.
8.1 ஆட்பதிவூத் திணைக்கள ஆணையாளரினால் விநியோகிக்கப்பட்ட தேசிய ஆளடையாள அட்டை 8.2 செல்லுபடியாகும் கடவூச்சீட்டு 8.3 அஞ்சல் அடையாள அட்டை.
9. சித்திபெற்றமையை தீர்மானித்தலும்இ பரீட்சை முடிவூகளை வெளியிடலும்.- இப்பரீட்சைக்குரிய பாடங்கள் 4 ஆகும். குறித்த நான்கு பாடங்களிலும் சித்திபெறும் பரீட்சார்த்திகள் மட்டும் இப்பரீட்சையில் சித்திபெற்றௌராகக் கருதப்படுவர். ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்திபெற்று ஒரு பாடத்தில் மற்றும் சித்திபெறத் தவறுவோர் நூன
சித்தி பெற்றௌராகக் கருதப்படுவர். அவர்கள் அடுத்து வரும் இரண்டு வருட பாPட்சைகளுக்குள் நூன சித்திப் பாடத்திற்குத் தோற்றி சித்திபெற்றால், பரீட்சையில் சித்தி பெற்றௌராகக் கணிக்கப்படுவர்.
9.1 பரீட்சை முடிவூகளை வெளியிடல்.- விண்ணப்பதாரிகளின் பரீட்சை முடிவூகள் பற்றிய விபரங்கள் இந்து அறநெறிப் பாடசாலை அதிபர்ஃ பொறுப்பாளருக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
10. சான்றிதழ்.- இப்பரீட்சையில் சித்திபெறும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
11. பரிசு.- இப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்திபெறுவோருக்கு பரிசுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும்.
12. விடைத்தாள் மீள்பரிசீலனை செய்தல்.- பரீட்சை முடிவூகள் வெளியாகி 30 நாட்களுக்குள்இ இத்திணைக் களத்தினால் விநியோகிக்கப்படும் படிவங்கள் மூலம் இந்து அறநெறிப் பாடசாலை அதிபர்ஃ பொறுப்பாளர் கோரியிருப்பின்,
விடைத்தாள்கள் மீள் பார்வையிடுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும். இதற்குரிய கட்டணத் தொகை அவ்வப்போது மாற்றம் பெறுவதால், குறித்த தொகை உரிய பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கட்டணம், பரீட்சை பெறுபேறுகளில் மீள் பரிசீலனையின்போது திருத்தம் இருப்பின் மட்டும் மீளச் செலுத்தப்படும். எக்காரணங்கொண்டும் விண்ணப்பதாரிக்கோ
அல்லது அவரது பிரதிநிதிகளுக்கோ விடைத்தாள்களைப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.
13. இங்கு குறிப்பிடப்படும் அனைத்து நிபந்தனைகளுக்கும் அறிவூறுத்தல்களுக்கும் அமைய நடந்துகொள்வதற்கு எல்லா
விண்ணப்பதாரிகளும் கட்டுப்பட்டுள்ள அதேவேளைஇ இங்கு குறிப்பிடப்படாத ஏதேனும் விடயங்கள் இருப்பின் அவை
பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் தற்றுணிபுக்கேற்பத் தீர்மானிக்கப்படும்.
பீ. சனத் பூஜித
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
ஒழுங்கமைப்பு (நிறுவனம்சார் மற்றும்
வெளிநாட்டு பரீட்சைகள்) கிளை,
பெலவத்தை
பத்தரமுல்லை
2019 நவெம்பர் 20.