கட்டுநாயக்கா, பொறியியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறி ‘2019 குழு” வூக்காக பொறியியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக் கொள்வதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து இத்தால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. தகுதி.-
1.1. கல்வித் தகைமைகள்.-
க. பொ. த. (உயர்தர) பரீட்சையில் இணை கணிதம்இ பௌதிகவியல் மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி.
மற்றும் சகல பாடநெறிகளுக்கும் க. பொ. த. (சா. த.) பரீட்சையின் மூன்று தடவைகளுக்கு மேற்படாதவாறு ஆங்கில மொழிக்கு திறமைச் சித்தி.
1.2 வயது.- 2019.12.31 ஆந் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 25 க்கு மேற்படாதவாறும் இருத்தல் அவசியம்.
குறிப்பு: கடல் பொறியியல் துறைக்காக தெரிவூ செய்யப்படும் போது 20 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2. தேர்ந்தெடுப்பதற்கான வரைகூறு.-
2.1 மேலே 1.1 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சேர்த்துக்கொள்ளப்படுவதற்கான ஆகக்
குறைந்த தகைமையூடன் 1.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வயதெல்லைக்குள் உள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து கீழ் காட்டப்படும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2.2 அடிப்படை தகைமைகளை பூரணப்படுத்தியூள்ள சகல விண்ணப்பதாரிகளும் ஆங்கில மொழியிலான
எழுத்துமூல பரீட்சையொன்றுக்குத் தோற்றல் வேண்டும். (எழுத்துமூல பரீட்சைக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரிகளுக்கு அப்பரீட்சை பற்றி நேரகாலத்தோடு அறிவூறுத்தப்படும்).
2.3 எழுத்துமூலப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்இ திறமை அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
2.4 எழுத்துமூலப் பரீட்சைஇ நேர்முகப் பரீட்சை ஆகியனவற்றில் பெற்றுக்கொண்ட மொத்த அடிப்படையில் பாடநெறிக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
2.5 தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பாடநெறியை பதிவூசெய்வதற்கு முன்னர்இ தமது சொந்த செலவில் மருத்துவ பரிசோதனையொன்றினை செய்ய வேண்டும். (கடல் பொறியியல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
அவர்களுடைய பதிவூ இடம்பெற்றதன் பின்னர் மற்றுமொரு விசேட மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டும்.