இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி ஆட்சேரப்புக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேவையான அடிப்படைத் தகைமைகள் :
(அ) வயதெல்லை.-
வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவூத் திகதியன்று 18-28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே இலங்கைப் பொலிஸில் சேவையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி உத்தியோகத்தர்களுக்கு விண்ணப்ப முடிவூத் திகதியன்று 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியூடையவர்களாவா;.
(ஆ) கல்வித் தகைமைகள்.- க.பொ.த. (சா. தரப்) பரீட்சையில் கணிதம்/ தாய்மொழி உட்பட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இரண்டு தடவைகள பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரா;கள் முதலாவது தடவையில் ஒரே முறையில் 5 பாடங்களில்
கணிதம்/ தாய்மொழி இரண்டு பாடங்களில் அல்லது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
குறிப்பு 1.- இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வகைப்படுத்தலின்படி பாடங்களின் எண்ணிக்கையை
வகைப்படுத்தும்போது விஞ்ஞான பாட இலக்கங்கள் 41 உம் 44 உம் ஒரு பாடமாகவூம் இல. 42, 45 ஐக் கொண்ட கணித பாடங்கள் ஒரு பாடமாகவூம் கருதப்படும். க. பொ. த. (சா. தரப்) பரீட்சையில் சித்தியடைந்த பாடங்களின் எண்ணிக்கை அதன் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
குறிப்பு 2.- க.பொ. த. (சா. தர) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடத்தில் சித்தியடையாமல் அதே பாடத்தில் செயல்முறைப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தபோதும் அப்பாடத்தில் சித்தியடையாதவராகக் கருதப்படுவார்.
குறிப்பு 3.- விருப்பத்திற்குரிய தமிழ்/ ஆங்கிலம்/ சிங்களம் ஆகிய பாடங்கள் க. பொ. த. (சா. தர) பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படாமையால் அப்பாடங்களில் சித்திபெறுதல் க. பொ. த. (சா. தரப்) பரீட்சையில் சித்தியெய்திய பாடங்களாக கருதப்பட மாட்டாது.