தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதால் தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை இணைப்புச் செய்யுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அழைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறே மாணவர்களையும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்ல அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூரப் பிரதேச ஆசிரியர்கள் பலர் மோட்டார் சைக்கிள் பயன்படுத்ருகின்றனர். அவர்கள் பணிக்குச் செல்ல எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
எனவே, தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு அனுமதிக்குமாறும், தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு கடமைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று கடமை புரியும் வகையில் இணைப்புச் செய்ய வழி செய்யுமாறும் கூட்டமைப்பு கோரியுள்ளது.
அல்லது பொருத்தமான மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.