அருகிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களை இணைப்புச் செய்தல் – அறிவித்தலும் ஒழுங்குகளும் – சப்ரகமுவ மாகாணம்

தமது வதிவிடத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களை இணைப்புச் செய்வதற்கான வழிகாட்டலையும் மாதிரி விண்ணப்பத்தையும் சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் வலயத் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

 1. பெற்றாரின் எழுத்து மூல விண்ணப்பம்
 2. மாணவர் தற்போது கற்கும் பாடசாலையில், மாணவர் கற்கும் தரம், பாடங்கள், மாணவர் முன்னேற்ற அறிக்கை எண் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் கடிதம்

இவை இரண்டையும் சமர்ப்பிக்கும் போது வலயக் கல்விப் பணிப்பாளர்கள் விண்ணப்பிக்கும் பாடசாலைக்கான அனுமதியைத் வழங்குவர்.

புதிய பாடசாலையில் மாணவர்களுக்கு பின்வரும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்

 1. மாணவர்களை சேர்ப்பதற்கு தனியான பதிவு
 2. ஆவணங்களைப் பேணுவதற்கான தனியான கோப்பு
 3. குறிப்பிட்ட வகுப்பில் மாத்திரம் மாணவரை சேர்த்தல்
 4. ஏற்கனவே பயன்படுத்தப்படும் வரவு இடாப்பில் இடமிருப்பின் இறுதியில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்
 5. மாணவர்களுக்கு இலகுவான வகையில் பழைய அல்லது புதிய பாடசாலையின் சீருடையை அணிதல்
 6. வசதிகள் சேவகள் கட்டணமோ வேறு கட்டணங்களோ அறவிடப்பட முடியாது
 7. அனைத்து தவணைப் பரீட்சைகள் மற்றும் பாடசாலை மட்டக் கணிப்பீடு என்பவற்றின் புள்ளிகளை முன்னைய பாடசாலைக்கு அனுப்பதல்
 8. தற்போது பயன்படுத்தும் கொப்பிகளைப் பயன்படுத்த அனுமதித்தல்
 9. இந்த மாணவர்களை புதிய சூழலுக்கு சமூகமயப்படுத்துவது அதிபரின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும்
 10. புதிய பாடசாலையில் மாணவருக்கு மானசீக, சமூகப் பிரச்சினைகள் தோற்றம் பெறின் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு உடனடியாக அறிவித்தல்

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் புதிய அனுமதி தொடர்பான தனியான கோப்பு ஒன்றை பயன்படுத்தல்

පවත්නා තත්ත්වය හමුවේ පාසල් සිසුන් තාවකාලිකව පාසල්වලට ඇතුළත් කරගැනීම – සබරගමුව පළාත

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!