அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்
அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை முன்வைத்தார்
“அடுத்த வாரத்தில் இருந்து இதை நடைமுறைப்படுத்த நம்புகிறோம். தற்போது, எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் பெரும் கூடுத ல் செலவு ஏற்படுகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், அதற்கு பொது நிர்வாக அமைச்சினால் நேரடியாக உதவி செய்யப்படும்.
தினேஷ் குணவர்தன