இலங்கை உயர் தொழிநுட்பவியல் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல கொழுப்பனைவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 1500 இல் இருந்து 2500 ஆக அதிகரிக்கப்படுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
நகரத்திட்டமிடல், நீர் வழங்களல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இலங்கை உயர் தொழிநுட்பவியல் கற்கை நிறுவனத்தின் 19 கிளைகளில் சுமார் 20000 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.