கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஒரு சில சிரேஸ்ட மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் செயற்பாடுகளால் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கு படிக்கும் மாணவனை, வழிகாட்டி அதிகாரி ஒருவர் கழிப்பறை கொமட்டில் கையை வைத்து கழுவுமாறு உத்தரவிட்டதால், அந்த மாணவியின் தந்தையான பேராசிரியர் ஒருவர், தனது பிள்ளையை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இதன்மூலம் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளில் ஒருசில பெண் அதிகாரிகளும் புதிய மாணவர்களும் சிரேஷ்ட மாணவர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளியேறி வருவதாக தெரியவந்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் பெரும் முயற்சிகள் இருந்தும் இங்குள்ள ஒரு சிலரால் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநீதிக்கு ஆளானவர்களின் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-aruna.lk