நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலமையில் பாடசாலைக்கு கால தாமதமாக வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிபர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நேற்று பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்கக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த கல்வி அமைச்சர், பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் இடம்பெறாமையினால் தரம் 1. மற்றும் 2 மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு 197 நாட்கள் பாடசாலையை நடாத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மேல் மாகாணத்தில் 94 நாட்களே பாடசாலைகள் இடம்பெற்றன. ஏனைய மாகாணங்களில் 117 நாட்கள் நடைபெற்றன. அவ்வாறே, 2021 ஆம் ஆண்டு 229 நாட்கள் பாடசாலை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் மேல் மேல் மாகாணத்தில் 102 நாட்களும் ஏனைய மாகாணங்களில் 143 நாட்களும் நடைபெற்றன.
2022 ஆம் ஆண்டில் முதலாம் தவணையில் 23 நாட்களில் 14 நாட்களே பாடசாலைகள் இடம்பெற்றன. இரண்டாம் தவணையின் ஒக்டோபர் வரை பாடசாலை நடாத்தப்படவேண்டும். இதன் மூலம் 44 நாட்களை பெறலாம் என்றார்.
அதேபோல் பஸ் போக்குரத்தது குறைந்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடு பாதிக்கப்படைய விடமுடியாது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம். பாடசாலைக்கு தாமதித்து ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை தரல், மாணவர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை காலணி அணியாத பிரச்சினைகளின் போது அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.