சாதாரண தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை 15 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச தபால் கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதிவு தபால் கட்டணம் தற்போது 45 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.