நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை மற்றும் நீண்ட மணி நேர மின் தடை என்பவற்றைச் சமாளிப்பதற்காக ஏப்ரல் விடுமுறையை எதிர்வரும் திங்கள் முதல் வழங்குமாறு நுகர்வோர் பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
மாணவர்கள் நீண்ட மின் வெட்டின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக நுகர்வோர் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்னாயக்க தெரிவித்தார்.