92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசலை இம்மாதம் 21 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் வெளியிடவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வினியோகம் இடம்பெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்க வேண்டாம் எனவும் வாகனங்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை 21 ஆம் திகதி முதல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்திருந்தது.
21 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்தி 21 ஆம் திகதியே எவ்வாறு பாடசாலைக்கு வருவது சாத்தியமாகும் என பலரும் கேள்வி தொடுத்துள்ளனர்.
அத்தோடு 21 ஆம் திகதி வாகன இலக்கத்தகட்டின் கடைசி எண் அடிப்படையில் சிலருக்கே எரிபொருள் கிடைக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.