வெளிநாடு செல்வோர் தோற்றும் பல பரீட்சைகள் ரத்து

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பல பரீட்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஜப்பானிய குடிவரவு சேவை முகவர் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் பின்வருமாறு.

ஜப்பானிய மொழியின் அடிப்படை பரீட்சை (JFT அடிப்படை)
நேர்சிங் திறன் தேர்வு
உணவு பதப்படுத்தும் திறன் பரீட்சை

மேலும், நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, மேற்கூறிய பரீட்சைகளின் திகதிகள் (Specified Skilled Worker Program – SSWP) திருத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று ஜப்பான் குடிவரவு சேவை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படவில்லை

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!