பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 03ஆம் தரத்திற்கு 1ஆம் மற்றும் 2ஆம் தரங்களில் ஆரம்பக் கல்வியின்றி பிரவேசிக்கும் பிள்ளைகளின் அடைவு மட்டம் தொடர்பில் மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தரம் 3 மாணவர்கள் தரம் 1 மற்றும் தரம் 2 இல் போதிய பாடசாலை நாட்களை பெறவில்லை என்பதோடு அடிக்கடி பாடசாலை மூடப்பட்டமையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமமில்லாத பாடசாலைகளின் பிராந்திய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் ஐந்து நாட்களும் வழமை போன்று பாடசாலைகளை நடத்த முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.