புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமானம் செய்துள்ளது.
கல்வி அமைச்சராக மீண்டும் சுசில் பிரேம ஜயந்த் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும்,
டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்,
சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும்,
பந்துல குணவர்தன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும்,
கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
மஹிந்த அமரவீர விவசாய மற்றும் வனவள, வனப்பாதுகாப்பு அமைச்சராகவும்,
விஜயதாச ராஜபக்ஸ நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும்,
ஹரீன் பெர்ணான்டோ காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,
ரமேஷ் பத்திரண பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,
பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அமைச்சராகவும்,
அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராகவும்,
விதுர விக்ரமநாயக்க புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்,
கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,
நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,
ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும்,
டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும்,
நலின் பெர்ணான்டோ வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்,
பதவியேற்றுக் கொண்டுள்ளனர்