பேராதனை பல்கலையில் 64 பேருக்கு தொற்று

பேராதனை பல்கலைக்கழகத்தில் அறுபத்து நான்கு மாணவர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

 பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இதே நேரம் பல்கலைக்கழகங்களை முழுமையாக திறப்பது கடினம் எனவும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கு அமைய அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்படுவர் எனவும் பிரதி உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!