அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)
1. அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்தப் போட்டிப்பரீட்சைக்கு தகைமையூடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பரீட்சையானது 2019 யூன் மாதம் கீழே அட்டவணை 01இல் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படும். நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாக இப்பரீட்சையினை ஒத்தி வைப்பதற்கான அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கான அதிகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு உள்ளது.
தகைமைகள்.
அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க அலுவலர்; சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச்சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் III இற்கான பதவிக்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பதாரிகள் கீழ்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(அ) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் இறுதித்திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 32 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்@
(அதற்கமைவாக 01.03.2001 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் மற்றும் 01.03.1987 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னா; பிறந்தவர்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க தகைமை உள்ளது.)
(இ) நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்
(ஈ) அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும் சிறந்த உடல், உள ஆரோக்கியம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(உ) கீழ்வரும் கல்வித்தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(I) சிங்களம் அல்லது தமிழ் மொழி மற்றும் கணிதம் உட்பட நான்கு (04) பாடங்களுக்கு திறமை சித்திகளுடன் ஒரே தடவையில் ஆங்கிலம் உட்பட ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மற்றும்
(II) கல்விப் பொதுத்தராதரப்பத்திர (உயர் தரப்) பரீட்சையின் சகல பாடங்களிலும் (பொது அறிவூப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்து ) ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல் (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே தடவையில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் போதுமானதாகும்.)
கவனிக்க. – சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய தகைமைகளை வர்த்தமானப் பத்திரிகையின் திகதியாகிய 2019 மார்ச்சு மாதம் 01 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.