ஊவா மாகாண சபை அரச சேவை ஆணைக்குழு
ஊவா மாகாண சபையில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2020
மாகாண சபையில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்களம் மற்றும் தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் மொழி பாடசாலைகளில் நிலவும் தொடர்பாக, திறந்த அடிப்படையில் கீழே சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்படுவதுடன், குறித்த விண்ணப்பம் கோரம் அறிவித்தல் மற்றும் விண்ணப்பம் www.psc.up.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் கோரப்படும் பாடங்கள்
க.பொ.த. (சாதாரண தரம்)
கணிதம்/ விஞ்ஞானம்/ விவசாய மற்றும் உணவுத் தொழில்நுட்பம்
க.பொ.த. (உயர் தரம்)
பொறியியல்
தொழில்நுட்பவியல்
உயிரியல் தொகுதி
தொழில்நுட்பவியல்
தொழில் நுட்பவியல் தொடர்பாக விஞ்ஞானம்
இரசாயனவியல்
ஆங்கிலம்
பௌதிகவியல்
இணைந்த கணிதம்
உயர் கணிதம்
கமத்தொழில் விஞ்ஞானம்
கல்வித் தகைமைகள் க.பொ.த. (சாதாரண தரம்) சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி பாடமொன்றாக சித்தியடைந்திருத்தல், க.பொ.த (உயர் தரம்) பொது வினாப் பரீட்சை தவிர்ந்த 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல், மற்றும் விண்ணப்பிக்கும் பாடம் தொடர்பாக விசேட அல்லது சாதாரண பட்டதாரிப் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித் தினத்திற்கு அதாவது, 2020.12.30ஆம் திகதிக்கு 18 வயதிற்குக் குறையாமலும் 35 வயதிற்கு
மேற்படாமலும் இருத்தல் வேண்டும்
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித் திகதி : 2020.12.30 ஆகும்.