எதிர்வரும் இரு வாரங்கள் மிக அவதானத்துகுரியவை

கொவிட் நோய் மீண்டும் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாகவும், பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் சமய ஒன்றுகூடல்கள் இடம்பெறும் இடங்களில் அறிகுறிகளுடன் நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இலங்கையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் நோயாளிகள் என உறுதிப்படுத்தும் அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இல்லை எனவும் இதன் காரணமாக நோயாளர்களை அடையாளம் காண்பதில் பாரிய சிக்கல்கள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் பதினைந்து நாட்களில் இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணாமை, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் அதிகளவான கொவிட் நோயாளிகள் பதிவாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!