பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தம்

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதற்கு அடையாளமாக நாளை மறு தினம் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் விரிவுரையாளர்களும் நாளை மறுதினம் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து காலிமுகத்திடலுக்கு நடைபேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!