பாடசாலைகளை ஆரம்பித்தல்- 18 முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள்

18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றல் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் பாடசாலைகளை நடாத்துவதற்கு அனைத்துத் தரப்புக்களுடனும் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

18 ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து முதல் இரு வாரங்களுக்கு மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர் வரவு, ஆசிரியர்கள் வரவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் முதலானவற்றைக் கருத்திற் கொண்டு, அதன் பின்னர் வரும் விடுமுறைகளை நீக்கிவிட்டு உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை விரைவிலவிரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!