பாடசாலைகளை தொடர்ந்து நடாத்திச் செல்வது தொடர்பாக அடுத்த வாரம் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள கல்வி அமைச்சு தயாராகியுள்ளதாக இலங்கை ஆசிரியர சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைக்கு மத்தியில் பாடசாலைகளை நடாத்தி செல்வது சவாலாகியுள்ளதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், நாளை 17 ஆம் திகதி விடுமுறையை அறிவிக்கவும் பாடசாலைகளை தொடர்ந்து நாடத்துவதற்கான திட்டம் ஒன்று தொடர்பாகத் தீர்மானத்தை அடுத்த சில தினங்களில் மேற்கொள்ளவும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.